தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள். தமிழக முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்!!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.01.2026) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 108 கோடியே 90 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 11 திருக்கோயில்களில் 18 புதிய திட்டப் பணிகள் மற்றும் ஒரு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டி, 15 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் 7 திருக்கோயில்களில் 10 முடிவுற்ற திருப்பணிகள் மற்றும் 6 சரக ஆய்வாளர் அலுவலகங்களை திறந்து வைத்து, சிற்றுந்துகளின் பயன்பாட்டினை காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர். ஆர். காந்தி, மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர். நா.முருகானந்தம், இ.ஆ.ப., சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் .மணிவாசன், இ.ஆ.ப, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் முனைவர் துரை. இரவிச்சந்திரன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, கூடுதல் ஆணையர் (திருப்பணி) பொ.ஜெயராமன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக