குடியாத்தம் அருகே நிலத்தை விற்பனை செய்வதாக கூறி ரூ .1 கோடி மோசடி! ஒருவர் கைது!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த அனங்காநல்லூர் மோட்டூர். கிராமத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. இவருடைய மனைவி பானுமதி என்பவர் கடந்த 12 12 2025 தேதி அன்று மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் அளித்த புகாரில்.
கொண்ட சமுத்திரம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கர்.த/.பெ. கிருஷ்ணசாமி நாயுடு என்பவருக்கு சொந்தமான நிலத்தை எங்களுக்கு விற்பனை செய்வதாக கூறி ரூபாய் ஒரு கோடி முன்பனமாக பெற்றுக் கொண்டு ஆறு மாத காலத்திற்குள். கிரையம் செய்து கொடுப்பதாக கூறி பதிவு செய்யப்படாத அக்ரிமெண்ட் எழுதிக் கொடுத்துவிட்டு காலம் முடிவதற்குள்
வேலூர் சத்துவாச்சாரியில் வசிக்கும். வெங்கடராமன்.த/.பெ. கோதண்டபாணி என்பவருக்கு . எங்களுக்கு விற்பனை செய்வதாக இருந்த தை. நிலத்தை. அவருக்கு விற்பனை செய்து எங்களை ஏமாற்றியதாக கொடுத்த புகாரின் அடிப்படையில்.. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனம் அவர்களின் உத்தரவு பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திருநாவுக்கரசு அவர்கள் வழக்கு பதிவு செய்து. பாஸ்கர் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது என தெரிவித்தனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்யராஜ்.

கருத்துகள்
கருத்துரையிடுக