பத்திரிகையாளர். சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள். S.M.சுப்ரமணியம், P.தனபால் அமர்வு உத்தரவு!!

சவுக்கு சங்கரின் கைது ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல் என்றும் ஏன் ஒருவரை இவ்வளவு டார்ச்சர் செய்கிறீர்கள் என்றும் நீதிபதிகள் கேள்வி

உண்மையில் உங்களுக்கு தைரியம் இருந்தால் அமலாக்கத்துறை 2 முறை கடிதம் அனுப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - 

சவுக்கு சங்கரின் உடல்நிலை மற்றும் சட்டப்போராட்டங்களைக் கருத்தில் கொண்டு,  அவருக்கு 3 மாத கால இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு இருக்கும் இதய நோய் பாதிப்பு மற்றும் சர்க்கரை நோய் (Diabetes) ஆகியவற்றுக்கு உரிய சிகிச்சை பெற இந்த ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைப்படுத்தப்படுவதால், தற்போது நிலுவையில் உள்ள மற்ற வழக்குகளுக்காக அவரை மீண்டும் கைது செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

"அதிகாரிகள் தொடர்ந்து ஒரு நபரையே குறிவைப்பதைத் (Targeting) தவிர்க்க வேண்டும்" என்றும், அதற்குப் பதிலாக "பெரிய அளவிலான ஊழல் வழக்குகளில் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!