இரவில் பாதையாத்திரை செல்லும் பக்தர்களின் முதுகில் Reflecting Stickerமுதுகில் ஒளிரும் ஸ்டிக்கர்!காவல்துறையின் புதிய முயற்சி குவியும் பாராட்டுக்கள்!!
தூத்துக்குடி &மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியே இருக்கன்குடி மாரியம்மன் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கு முதுகில் ஒளிரும் ஸ்டிக்கர்களை போலீசார் ஒட்டி வைத்து மேலும் அறிவுரைகளும் வழங்கினார்கள். இரவு நேரங்களில் பாதயாத்திரை பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்றும் ஒளிரும் ஸ்டிக்கர்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டும் தூத்துக்குடி மதுரை நெடுஞ்சாலை மிகவும் அபாயகரமானது மேம்பால பணிகள் நடப்பதால் பாதுகாப்பான முறையில் நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் எந்த இடத்தில் தங்கினாலும் அருகில் காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும் தங்கும் இடத்தின் தன்மையை அறிந்து கொண்டு தங்க வேண்டும் அந்நிய நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனே காவல்துறைக்கு தெரிவிக்க வேண்டும் நேரில் சென்று தெரிவிக்க முடியாவிட்டால் அவசர போலீஸ் எண் 100க்கு தொடர்பு கொள்ளவும் எந்த நேரத்திலும் உதவி செய்ய காவல்துறை கடமைப்பட்டுள்ளது என்றும் பக்தர்களுக்கு அறிவுரைகள் வழங்கி பக்தர்களை வழி அனுப்பினார்கள் காவல்துறையினர் .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக