முல்லைப் பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல். MKM முத்துராமலிங்கம் தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு!!

முல்லைப் பெரியாறு, வைகை பாசன விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வக்கீல். MKM. முத்துராமலிங்கம் தலைமையில் பொதுச் செயலாளர். ஆதிமூலம், வக்கீல்கள். பாண்டி மணி, மலை முருகன் உள்பட பலர் தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்று கொடுத்துள்ளனர்.

அந்த மனுவில் காவிரி டெல்டாவில் விவசாயிகளுக்காக தொடர்ந்து மண்ணையும் மக்களையும் பாதுகாக்க தொடர்ந்து போராடிவரும் விவசாய சங்க தலைவர் பி ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜ் அவர்களுக்கு திருவாரூர் மகளிர் நீதிமன்றம் 13 ஆண்டு கால சிறை தண்டனை வழங்கியுள்ளது. இந்நிலையிலேயே

 பி. ஆர் பாண்டியன் மற்றும் செல்வராஜ் அவர்கள் மீது வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு ஞாயத்துக்காக போராட முன் வருகிற விவசாய சங்க தலைவர்கள் சமூக அக்கறை கொண்ட தன்னார்வலர்கள் விவசாயிகள் மத்தியில் இந்த தீர்ப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது திருவாரூர் மாவட்டம் விக்கிரபாண்டியம் காவல் நிலையத்தில் தொடரப்பட்ட பொய் வழக்கினை தென்னிந்தியா பசுமை தீர்ப்பாயத்தில் பசுமை தீர்ப்பாயமே இது பொய் வழக்கு என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஓ என் ஜி சி யின் பணிகளுக்கு உடன் அப்போது தடைவிதித்தது. மேலும் தமிழக அரசு காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது டெல்டா மாவட்டங்களில் மத்திய மாநில அரசுகளும் புதிய திட்டம் தொடர்வதை அனுமதிக்காமலும் இருந்து வரும் இந்த சூழலில் நீதிமன்ற தீர்ப்பு விவசாயிகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் தொடர் போராட்டங்களையும் மேற்கொள்ளும் சூழலை உருவாக்கியுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் அவர்கள் விவசாயிகளின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழக அரசு மேல்முறையீடு செய்து மண்ணையும் மக்களையும் பாதுகாக்க போராடிய போராளி. டி. ஆர். பாண்டியன் மற்றும் செல்வராஜ் அவர்களை அந்த வழக்கில் இருந்து விடுவிக்க விவசாயிகளின் கோரிக்கையும் மனுவை பரிந்துரை செய்ய வேண்டுகிறோம் இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!