நெமிலியில் அதிமுக சார்பில் நடைபெற்ற MGR அவர்களின் 38- ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர்.எம்.ஜி.ஆர் அவர்களின் 38-வது நினைவு தினம் நெமிலி நகர செயலாளர். செல்வம் தலைமையில் நடைபெற்றது. நெமிலி நகர பொருளாளர். நவநீதகிருஷ்ணன் வரவேற்பு வழங்கினார்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா அவர்களது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் நெமிலி ஒன்றிய மாணவர் அணி செயலாளர். முருகன்,
நெமிலி பேரூராட்சி கவுன்சிலர். சங்கர், நெமிலி நகர கழக நிர்வாகிகள். பரந்தாமன், சுகுமார், சத்யமூர்த்தி, வினோத் குமார், பூபாலன், சுப்பன், கார்த்தி, விநாயகம், சோமு, ஜெகன், நாகராஜ், சந்திரபாபு, ஏழுமலை, சேகர், பிச்சாண்டி, சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர, கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.



கருத்துகள்
கருத்துரையிடுக