கடியாபட்டியில் துணைமின் நிலையம். அமைச்சர். ரகுபதி தொடங்கிவைத்தார் !!

புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் தாலுகா கடியாபட்டியில் ரூ13 கோடியில் புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அரசு உத்தர விட்டுள்ளது. இதையடுத்து அதற்கான கட்டுமானப்பணிக்கு  அடிக்கல்  நாட்டுவிழா நேற்று நடந்தது. விழாவுக்கு செயற்பொறியாளர் ( பொ) அக்னிமுத்து தலைமை வகித்தார்.அரிமளம் ஒன்றிய முன்னாள்  தலைவர்கள்.  பொன்.ராமலிங்கம், மேகலாமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கடியாபட்டி ஊராட்சி முன்னாள் தலைவர். உமாமகேஸ்வரி வரவேற்றார்.  புதிய துணை மின் நிலையம் அமைக்க  கட்டுமான பணியை அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர். அசோக் குமார், மாவட்ட பண்டக மேற்பார்வையாளர்.  பிச்சுமணி, முன்னாள் ஊராட்சி தலைவர். சோமசுந்தரம் ஆகியோர் பேசினர். உதவிப்பொறியாளர். சங்கீதா  நன்றி கூறினார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!