தேர் நிறுத்தப்படும் பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக கூறி சாலையில் படுத்து போராட்டம் செய்த சமூக ஆர்வலர்!!


தேனி மாவட்டம் சின்னமனூரில் உலகப்புகழ் பெற்ற சிவகாமியம்மன் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பாத்தியப்பட்ட தேர் சின்னமனூர் காவல் நிலையம் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளது.

தேர் நிறுத்தப்படும் இடம் மற்றும் அதன் அருகில் உள்ள இடங்கள் அனைத்தும் இந்து அறநிலைத்துறைக்கு சோந்தமான இடமாகும் அந்த இடத்தில் தற்போது ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு ஆட்டோ நிறுத்தமாக உள்ளது.

இதனால் அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்துவதற்கோ, சென்று வருவதற்கோ ஆட்டோ நிறுத்தகம் இடையூறாக உள்ளது என்று கூறி சமூக ஆர்வலர் அப்தாகிகர் என்பவர் தேனி கம்பம் நெடுஞ்சாலையில் சாலையின் நடுவில் படுத்து போராட்டம் நடத்தினர்.

இதனால் அப்பகுதி பரபரப்பாகவே காணப்பட்டது.  சம்பவம் அறிந்த காவல்துறையினர் சமூக ஆர்வலர்களுடன் பேச்சுவார்த்தை செய்து பேச்சுவார்த்தையில் நீங்கள் முறைப்படி நகராட்சி மற்றும் இந்து அறநிலைத்துறை இடம் மனு கொடுத்து ஆட்டோ நிறுத்தத்தை மாற்ற வலியுறுத்துங்கள் என்று கூறியதை அடுத்து சமூக ஆர்வலர் தனது போராட்டத்தை கைவிட்டார்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!