கற்பக விநாயகா மருத்துவ கல்லூரி மற்றும் புதுகை தேற்கு மாவட்ட திமுக இணைந்து நடத்திய மருத்துவ முகாம்! அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார்!!
புதுக்கோட்டை மாவட்டம்,திருமயம் ஒன்றியம் கோட்டூரில் கற்பக விநாயகா மருத்துவக்கல்லூரி, புதுகை தெற்கு மாவட்ட திமுக இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாமை அமைச்சர். ரகுபதி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு திருமயம் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர். ஆர்.கணேசன் ,தலைமை வகித்தார். ஒன்றிய பொருளாளர். வேங்கையரசன்,முன்னாள் ஊராட்சித்தலைவர். பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணி செயலாளர். அருண்சேகர் வரவேற்றார். முகாமை கற்பகவிநாயகர் மருத்துவக்கல்லூரி சேர்மன் டாக்டர் .ஆர்.அண்ணாமலை தொடங்கி வைத்தார். பொது மருத்துவம்,கண்,பல்,இ.என்.டி, மகளிர்,குழந்தைகளுக்கான வியாதிகளுக்கு சிறப்பு டாக்டர்கள் வந்து 650 பேருக்கு இலவச சிகிச்சை அளித்தனர் . அனைவருக்கும் மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. துணை செயலாளர். பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக