டி.எஸ்.பி. அலுவலகம் குமாரபாளையத்தில் அமைக்கக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்துக் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !!

நாமக்கல் மாவட்டம்,அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உத்திரவின் பேரில், முன்னாள் அமைச்சர். தங்கமணி முயற்சியினால் குமாரபாளையம் தாலுக்கா துவங்கப்பட்டது. இதன் அலுவலகம் குமாரபாளையம் நகரில் அமைய, முன்னாள் நகராட்சி தலைவர். சேகர் தலைமையில் அனைத்து கட்சியினர் ஓரணியில் திரண்டு, வலியுறுத்தியதன் பேரில், குமாரபாளையம் தாலுக்கா அலுவலகம், நகராட்சிக்கு சொந்தமான அண்ணா  திருமண மண்டபத்தில் 2016, பிப். 27 முதல் செயல்பட துவங்கியது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்பட்டு  செயல்பட துவங்கியது. குமாரபாளையம் பொதுமக்கள் நீதிமன்ற பணிகளுக்கு திருச்செங்கோடு நீதிமன்றம் சென்று வந்த நிலையில், குமாரபாளையத்தில் நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது. தற்போது டி.எஸ்.பி. அலுவலகம் வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததின் பேரில், அதற்கான ஒப்புதல் கிடைக்கப்பெற்றது. ஆனால், டி.எஸ்.பி. அலுவலகம் பள்ளிபாளையம் பகுதியில் அமையவிருப்பதாக தகவல் வெளியானது. இதற்கு குமாரபாளையம் பகுதி பொதுமக்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இது குறித்து அனைத்து கட்சியினர் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்கள் நீதி மய்யம் மண்டல செயலாளர். காமராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர். சித்ரா, அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர். நாகராஜன், தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆறுமுகம், காங்கிரஸ் தங்கராசு, அதிமுக ரவி,கம்யூனிஸ்ட் நகர செயலாளர் கணேசன், மதிமுக நீலகண்டன், பஞ்சாலை சண்முகம், பன்னீர்செல்வம், குணா, தீனா உள்பட பலர் பங்கேற்றனர்.

ஈரோடு மாவட்ட செய்தியாளர்- யோகேஸ்வரி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!