தண்ணீர் டேங்க் மீது ஏறிய மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை தீயணைப்பு துறையினருடன் பாதுகாப்பாக மீட்ட காவல்துறையினர்!!
இராணிப்பேட்டை மாவட்டம், பானாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காட்டுப்பாக்கம் அருந்ததி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த நரசிம்மன் (வ 70), த/பெ முனிசாமி, ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர், இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் காட்டுப்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள தண்ணீர் டேங்க் மீது ஏறினார்.
தகவல் கிடைத்தவுடன், பானாவரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயணைப்புத் துறையினரின் உதவியுடன், முதியவரை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக கீழே இறக்கி மீட்டனர்.
இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பாக, அவசர சூழ்நிலைகளில் உடனடி தகவல் அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக