விட்டுக் கொடுக்கும் திமுக! தக்கவைக்கும் விசிகவின் கோட்டை – திட்டக்குடி!!
கடலூர் மாவட்டம், திட்டக்குடி:
தன் வாழ்நாளை சமூக விடுதலைக்காக அர்ப்பணித்த தியாகத் தலைவர். தொல். திருமாவளவன் அவர்கள் நிறுவிய சமூக விடுதலை இயக்கமான 'தலித் பேந்தர் இந்தியா (DPI)' மதுரையில் தொடங்கப்பட்டாலும், திட்டக்குடி மண் அதற்குக் கொடுத்த விலை ஈடு இணையற்றது. 1990களில் தொடங்கி, 2000ஆம் ஆண்டில் அரசியல் கட்சியாக விசிக பரிணாமம் கண்டது. இந்த அசுர வளர்ச்சிக்குப் பின்னால் திட்டக்குடி மண்ணின் தியாகமும், தொண்டர்களின் மகத்தான பங்களிப்பும், அளப்பரிய துயரங்களும் அடங்கியுள்ளன.
இந்த இயக்கத்தின் தொடக்க காலத்தில், தொண்டர்களும் தலைவர்களும் சந்தித்த அடக்குமுறைகளும் வழக்குகளும் விடுதலைப் போராட்டக் காலத்தைக் காட்டிலும் அதிகம் என்று சொன்னால் மிகையாகாது. சிறையில் தங்கள் வாழ்நாளைக் கழித்த போராளிகள் உண்டு. எண்ணிலடங்கா துயரங்களைச் சந்தித்து, காவல்துறையின் அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, இயக்கத்தை வளர்த்தெடுத்த மையப்புள்ளி திட்டக்குடி என்பதே மறுக்க முடியாத உண்மை.
இளமையிலேயே சமூகப் பற்று:
குணத்தொகையன் என்ற குணசேகரன்
அத்தகைய தியாக பூமியில், ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கடின உழைப்பால் படித்து, முதுநிலைப் பட்டதாரியாகி, தற்காலிக ஆசிரியராகப் பணிபுரிந்து, நிரந்தர ஆசிரியர் பணிக்குத் தயாராக இருந்த இளைஞர் ஒருவர், சமூக விடுதலை வேட்கையால் ஈர்க்கப்பட்டார்.
சமூக அடக்குமுறைகளைக் கண்டு கொதித்தெழுந்த அந்த இளைஞர், டாக்டர் அம்பேத்கர் வகுத்துத் தந்த பாதையான கல்வியே சிறந்த வழி என்ற உன்னதக் கொள்கையுடன், தன் சமூக இளைஞர்களுக்கு கல்விக் கண்ணைத் திறக்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் இருந்தார்.
அவர், தலைவர். தொல். திருமாவளவன் அவர்களின் "அடங்கமறு, அத்துமீறு, திமிராய் பேசு, திருப்பி அடி" என்ற முழக்கம் அடங்கி கிடந்த மக்களை உசுப்பியதைக் கண்டு, அச்சமின்றித் தானாக முன்வந்து இயக்கத்தில் இணைத்துக் கொண்டவர். அவரே, முதுநிலைப் பட்டதாரி, விசிகவின் முதல் ஒன்றிய அமைப்பாளர், குணசேகரன் என்ற குணத்தொகையன்.
களப்பணிகளின் நாயகன்:
குணசேகரன் அவர்களின் இயக்கப் பாதை மிகவும் கரடுமுரடானது, ஆபத்தானது. தொல். திருமாவளவன் அவர்கள் திட்டக்குடிக்கு இயக்கத்தைக் கொண்டு வந்த காலம் முதல், இன்றுவரை அவர் களத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றி வருகிறார். அவர் இந்தப் பகுதியின் ஒரு பகுதித் தலைவராகவே இருந்து செயல்பட்டு வருகிறார்.
சமூகப் பிரச்சினைகள் எதுவென்றாலும் களத்தில் நின்று போராடுவது இவரது இயல்பு.
அவர் மாற்று சமூகங்களின் நன்மதிப்பையும், பொது சமூகத்தின் நன்மதிப்பையும் பெற்றவர்.
பொதுச் சமூகங்களுக்கும் பட்டியல் சமூக மக்களுக்கும் இடையில் எழும் பிரச்சினைகளில் நடுநிலை வகித்து, தீர்வு காணும் வல்லமை கொண்டவராகத் திகழ்கிறார்.
மண்ணின் மைந்தனுக்கு அங்கீகாரம் கோரும் மக்கள்.
இத்தகைய அர்ப்பணிப்புள்ள அரசியல் பணி, மக்கள் பணி, களப்பணி செய்து வரும் குணசேகரன் அவர்களுக்கு, இந்த மண்ணின் மைந்தருக்கு ஏன் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் வாய்ப்பு வழங்கக்கூடாது என்று தொகுதி மக்கள் இன்று உரக்கக் குரல் கொடுக்கின்றனர்.
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி மக்கள் முன்வைக்கும் வேண்டுகோள்:
"இந்த முறையாவது திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியை விசிக-வுக்கு ஒதுக்கி, அந்த இயக்கத்தின் தொடக்கம் தொட்டு இன்றுவரை சிறப்பாகப் பணி செய்து வரும் குணசேகரன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்."
இந்தக் கோரிக்கையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். தொல். திருமாவளவன் அவர்களுக்கும், கூட்டணிக் கட்சியான திமுகவிற்கும் தொகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
2001 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் திமுக கூட்டணியில் இருந்தபோது திட்டக்குடி தொகுதி விசிக-வுக்கு ஒதுக்கப்பட்டது. 2001ஆம் ஆண்டு எழுச்சித்தமிழர் அவர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி இது. அதன் தொண்டர்கள் வாரிசுகள் மீண்டும் வெற்றியை நிலைநாட்டியதால், திட்டக்குடி விடுதலைச் சிறுத்தைகளின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது.
இந்த மண்ணின் மைந்தருக்கு சட்டமன்ற உறுப்பினராக வாய்ப்பு வழங்கப்பட்டால், அது இந்தப் பகுதி மக்களுக்குக் கிடைத்த அங்கீகாரமாகக் கருதுவோம் என்று மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி விசிக-வுக்கு மீண்டும் கிடைக்குமா? குணசேகரன் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, விசிக-வின் கோட்டை மீண்டும் உறுதியாகுமா? - என்று மண்ணின் மைந்தர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக