தமிழக முதல்வரின் திட்டங்களை கிராமங்கள் தோறும் கூற வேண்டும்!!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் கிளை இளைஞரணி நிர்வாகிகள், பூத் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மற்றும் என் ஓட்டுச்சாவடி,வெற்றி ஓட்டுச்சாவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கூட்டம் நடைபெற்றது. இதில் நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு அவர்கள் தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர். பவானி வடிவேலு முன்னிலை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர். கண்னையன் வரவேற்றார். 

இதில் சிறப்பு விருந்தினராக ஆற்காடு எம்எல்ஏ ஜே.எல் ஈஸ்ரப்பன் அவர்கள் கலந்துகொண்டு பேசியதாவது: புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பூத் நிர்வாகிகள் மற்றும் கிளை செயலாளர்கள் வரும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இன்று முதல் கடுமையாக உழைக்க வேண்டும். தமிழக முதல்வரின் உன்னத திட்டங்களான மகளிர் உரிமை தொகை, இல்லம் தேடி கல்வி, நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து கிராமங்கள் தோறும் பொதுமக்களுக்கு எடுத்து கூற வேண்டும். 

மேலும் தமிழக முதல்வரின் ஆலோசனைப்படி என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி என்னும் பெயரில் தங்கள் பகுதியில் கூட்டங்களை நடத்த வேண்டும். எஸ்ஐஆரில் விடுப்பட்ட பெயர்களை சேர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் பேசினார். இதில் யூனியன் கவுன்சிலர். விநாயகம், நெமிலி நகர வர்த்தக அணி அமைப்பாளர். ராகேஷ் ஜெயின், நிர்வாகிகள். அப்துல்ரகுமான், புருஷோத்தமன், பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!