நத்தத்தில் நடைபெற்ற கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம்!!

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள பாப்பாபட்டியில் திண்டுக்கல் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் திருநாவுக்கரசு உத்தரவுப்படி உதவி இயக்குனர் சரவணக்குமார் ஆலோசனையின் பேரில் நோய் புலானாய்வு பிரிவு உதவி இயக்குனர் ஜெயராஜ் வழிகாட்டுதல்படி தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கான கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்கு நத்தம் கால்நடை மருந்தக உதவி மருத்துவர் சிங்கமுத்து தலைமையில் கால்நடை ஆய்வாளர் மாரிமுத்து, உதவியாளர் செந்தில்குமார் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் செல்லம்புதூர், பாப்பாபட்டி, ஆவிச்சிபட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் தங்கள் கால்நடைகளுக்கு தடுப்பூசி போட்டுச் சென்றனர். எட்டாவது சுற்று தடுப்பூசி முகாம் திங்கட்கிழமையிலிருந்து தொடர்ந்து நத்தம் பகுதிகளில் 21 நாட்கள் நடைபெறும்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!