நத்தம் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி!!
நத்தம் அருகே பறவைகள் கணக்கெடுக்கும் பணி! கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் பகுதிகள் பல்வேறு கண்மாய் மற்றும் குளங்கள் உள்ள பகுதியாகும். இதில் நத்தம் அருகேயுள்ள சிறுகுடி ஊராட்சியில் உள்ளது கேசரிகுளம் ஆகும். இப்பகுதியில் இந்த குளத்தில் அதிகப்படியான பறவையினங்கள் வந்து செல்வதும், நடமாட்டமும் உள்ள குளம் ஆகும். இதையொட்டி இந்தக் குளத்தில் வருடத்திற்கு ஒருமுறை நத்தம் வனச்சரகம் சார்பில் கணக்கெடுக்கும் பணி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு சனிக்கிழமை நடந்தது. இதில் வனச்சரகர் ஆறுமுகம், வனவர்கள், வனக்காப்பாளர், வனக்காவலர் உள்பட பொள்ளாச்சியில் உள்ள வனக்கல்லூரியைச் சேர்ந்த 5 பேர் கொண்ட மாணவர் குழுவினரும் கலந்து கொண்டனர். இதில் அங்கு எத்தனை பறவைகள், அதன் வகைகள் மற்றும் அரிய வகையைச் சேர்ந்தவைகள் குறித்தும் கணக்கெடுத்தனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் ஜெயக்குமார்.


கருத்துகள்
கருத்துரையிடுக