உசிலம்பட்டி மின்னாம்பட்டி கிராமத்தில் பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்த கவுன்சிலர் அவர்களை பொதுமக்கள் வரவேற்பு!!
உசிலம்பட்டி அருகே மின்னாம்பட்டி கிராமத்தில் பள்ளி குழந்தைகளின் நீண்ட நாள் தேவையை நிறைவேற்றும் வகையில் பேருந்து வசதி ஏற்படுத்தி வழங்கிய தமிழ்நாடு மாவட்ட கவுன்சில் உறுப்பினர் SRK ரெட் காசி அவர்களுக்கு ஊர் கிராம பொதுமக்கள் சார்பில் வரவேற்பு அளித்து சிறப்பித்தனர்
இந்நிகழ்வில் அவருடன் வருகை தந்திருந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் செல்லம்பட்டி ஒன்றிய துணை சேர்மன் மணிகண்டன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு கிராம மக்கள் நன்றியை தெரிவித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக