விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான், நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்!!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, வானூர் மற்றும் மயிலம் ஆகிய ஒன்றியங்களில் நடைபெற்றுவரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்,  நேற்று (26.12.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது: 

விழுப்புரம் மாவட்டம்,விக்கிரவாண்டி ஒன்றியம், தொரவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2024 2025-ன் கீழ் ரூ.17.30 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள கணினி வகுப்பறையினை ஆய்வு செய்யப்பட்டது.

அதனைதொடர்ந்து, விக்கிரவாண்டி ஒன்றியம் ராதாபுரம் ஊராட்சி வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம் வளாகத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் 15 வது பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் பொது சுகாதார கட்டட பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும், வானூர் ஒன்றியம் திருவக்கரை ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுவினர்களால் கற்ச்சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யும் நிலையத்தினை ஆய்வு செய்யப்பட்டு, மகளிர் சுய உதவிக்குழுவினர்களிடம் கற்ச்சிலைகள் வடிவமைப்பு, விற்பனைகள், சிலை செய்வதற்கான கால அவகாசம் போன்றவைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து, மயிலம் ஒன்றியம் தழுதாலி பரிக்கல்பட்டு சாலையில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் 1.2 கி.மீ. தூரம் புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளதையும், மயிலம் ஒன்றியம் பாதிராப்புலியூர் -இளயாண்டிபட்டு சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் மூலம் 13 கி.மீ ரூ.7.72 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் சாலை விரிவாகம், சிறு பாலம் மற்றும் மயிலம் ஒன்றியம் வீடூர் ஊராட்சி சாலையில் கட்டப்பட்டுவரும் சிறு பாலத்தின் பணிகளையும், ஆய்வு செய்யப்பட்டது.

மேற்கண்ட பணிகளின் தற்போது நிலை குறித்தும், சாலைகள் மற்றும் பாலங்கள் தரம் குறித்தும் சம்மந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களிடம் விரிவாக கேட்டறியப்பட்டது. அனைத்து பணிகளையும் விரைவாக முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான்,  தெரிவித்தார்.

இந்த ஆய்வில், திட்ட இயக்குநர் / இணை இயக்குநர் (மகளிர் திட்டம்)  செந்தில்வடிவு, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் உத்தண்டி, உதவி பொறியாளர் கிருஷ்ணன், மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவக்குமார், இளங்கோவன், விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சையது முகமது, நாராயணன், வானூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விழுப்புரம் மாவட்ட சிறப்பு செய்தியாளர் டாக்டர் நடராஜன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!