ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டம்! தொடக்கப்பள்ளி சங்கங்கள் அதிரடி!!


ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஒன்றியத்தில் ஆசிரியர்களின் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கவில்லை என்றால் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளன.

 தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் ஏ. முருகன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்கம் வட்டார செயலாளர் ஜி. தமிழரசு மற்றும் நிர்வாகிகள் வட்டார கல்வி அலுவலர்கள் த.மீனாட்சி, சி.முருகன் ஆகியோரிடம் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது. தமிழக அரசு மாணவர்களுக்கு வழங்கும் விலையில்லா பொருட்களை அந்தந்த பள்ளிகளுக்கு அங்கு பணிபுரியும் ஆசிரியர்களே எடுத்து செல்ல வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள். ஆசிரியர்களும், மாணவர்களுக்கு எங்கே கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தினால் அதை தங்கள் சொந்த செலவில் எடுத்துச்செல்கின்றனர். இதனால் மாணவர்கள் கல்வியும் கற்பித்தலும் பாதிக்கப்படுகிறது. 

மேலும் இந்த கல்வி ஆண்டில் முதல் மற்றும் இரண்டாம் பருவத்தில் விலையில்லா பொருட்களை எடுத்துச் சென்ற பள்ளிகளுக்கு அரசாங்கம் ஒதுக்கிய அந்த போக்குவரத்து நிதியை பிரித்து கொடுக்க வேண்டும். நெமிலி ஒன்றியத்தில் இடைநிலை ஆசிரியர்களை எந்தவித அரசு அல்லது உயர் அலுவலர்களின் உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாக பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் பணியில் ஒப்புதல் இன்று மாற்று பணியில் வேறு பள்ளிகளுக்கு சென்று பணியாற்ற ஆணைவழங்கி அராஜக செயல்களில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். மகப்பேறு விடுப்பை பெண்  ஆசிரியர்கள் எடுக்கும்போது பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பெருமளவில் பாதிப்படைகிறது. இதனால் மகப்பேறு விடுப்பு காலத்தில் அப்பள்ளிக்கு தற்காலிக ஆசிரியரை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனுவை அளித்த ஆசிரியர் சங்கத்தினர் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் தினகர், சண்முகம், சீனிவாசன், தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி புருஷோத்தமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் என இரண்டு சங்கத்தினர் சேர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். 

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!