உயரமான திருவரங்குளம் சிவன் கோயில் கோபுரத்தில் எரிந்த கார்த்திகை தீபம்!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சாலையில் திருவரங்குளம் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு மாவட்டத்திலேயே மிக உயரமாக அமையப்பெற்ற கோபுரத்தில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக அம்பாள் வீதி உலா நடைபெற்றது.
கோயில் முன் அமைக்கப்பட்ட சொர்க்கப்பனை குடில் தீமைகள் ஒழித்து நன்மைகள் நடந்திட சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக