ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் 'மழலை பாரதிகள்',' மகாகவி' பாரதிக்கு மலர்தூவி மரியாதை!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாள் விழா 11.12.2025 இன்று கொண்டாடப்பட்டது. 

“ஓடிவிளையாடு பாப்பா” என்று பாப்பாவுக்குப் பாட்டுச் சொன்ன பாரதியின் பிறந்த நாளில் பள்ளி வளாகம் முழுவதும் மழலை பாரதிகள் “நிற்பதுவே நடப்பதுவே” என்ற கீதம் ஒலிக்க வலம் வந்த நிகழ்வு கண்ணுக்கினிய காட்சியாக அமைந்தது. பாரதியாரின் பிறந்த நாளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு  பாரதி வேடமணிந்து அழைத்து வந்தனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட பாரதிகளால் இன்று பள்ளி வளாகம் முழுவதும் பாரதிமயமாக இருந்தது. மழலை பாரதிகள் மகாகவி பாரதி படத்திற்கு  மலர்தூவி மரியாதை செய்தனர். நிகழ்வுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் முன்னிலை வகித்தார்.  பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசும்போது “இந்தியாவில் குட்டிக் கிராமம் எட்டையபுரத்தில் பிறந்து தேசிய கவியாக அறியப்பட்டவர் பாரதி. ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்தியாவை மீட்க தன் நெருப்புக் கவிதைகளால் வெறுப்பை உமிழ்ந்தவர். இந்திய மக்களிடம் சுந்திர எழுச்சியை ஏற்படுத்த தினம் தினம் எழுதிக் குவித்தவர். சுதந்திரம் அடைவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று நானிலம் முழுக்க நம்பிக்கையை விதைத்தவர். நூற்றாண்டு கடந்தும் அவர் பிறந்த நாளை போற்றிக் கொண்டாடக் காரணம் அவர் நாட்டுச் சுதந்திரத்திற்கு ஆற்றிய  பங்களிப்பு போற்றத்தக்கது. சிறந்த சமூக சீர்திருத்தவாதியாக மொழிப்பற்று, கல்வி, பெண் சுதந்திரம், நாட்டுவளம் என்று அவர் எழுதிய கீதங்கள் இன்னும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டேயிருக்கின்றன. நாட்டுக்குப் பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்ற பாட்டுக்கொரு புலவன் பாரதியை பள்ளிக் குழந்தைகள் அறிந்தும் தெரிந்தும் போற்ற வேண்டும் என்பதற்காகத்தான் இன்றைக்கு மழலை பாரதிகளை பள்ளி வளாகத்தில் வலம்வர வைத்தோம் என்று தெரிவித்தார்.  இந்த நிகழ்வில் ஏராளமான மாணவர்களும், ஆசிரியர்களும் பாரதியார் படத்துக்கு மலர்தூவி மரியாதை செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!