ஆம்பூர் அருகே கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மாமியார் வீட்டிற்கு வர்ணம் பூச சென்ற மருமகன் மீது வீட்டின் மேல் தள சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு!!
ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் பகுதியை சேர்ந்தவர் யேசுபாதம். இவர் வர்ணம் பூசும் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இன்று மேல்மிட்டாளம் பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்று கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் வீட்டிற்கு வர்ணம் பூசும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது வீட்டின் நுழைவுவாயில் உள்ள சுவர் மீது ஏறி வர்ணம் பூசி கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மேல் தள சுவற்றில் இருந்து கீழே தவறி விழுந்துள்ளார்.
அப்போது அவர் மீது மேல் தள சுவர் காலில் விழுந்ததில் யேசுபாதத்தின் கால் துண்டாகியுள்ளது.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து உமராபாத் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு. பாக்கியராஜ்.



கருத்துகள்
கருத்துரையிடுக