சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர். எடப்பாடியார் அவர்கள் அதிமுக கழக தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர்களுடன் ஆலோசனை!!
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் சென்னை, பசுமை வழிச் சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் இன்று (26.12.2025- வெள்ளிக்கிழமை), அதிமுக கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களை நேரில் சந்தித்து, கழக மாவட்ட வாரியாக, பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம், வாட்சப் என அனைத்து சமூக வலைதளங்களிலும் அதிமுக செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தங்கள் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளுக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் அறிவுறுத்தல் வழங்கினார்கள். இச்சந்திப்பின் போது, கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவுச் செயலாளர். சத்யன் அவர்கள் உடனிருந்தார்கள்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி

கருத்துகள்
கருத்துரையிடுக