நத்தம் கைலாசநாதர் கோயிலில் நடைபெற்ற பிரதோஷ விழா!!
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் கார்த்திகை மாத பிரதோஷ விழா நடைபெற்றது. இதில் நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர், இளநீர்,சந்தனம், விபூதி ,புஷ்பம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், அலங்காரமும், தீபாராதனைகளும் நடந்தது.தொடர்ந்து மூலவர் கைலாசநாதர்- செண்பகவல்லி அம்மனுக்கு விசேஷ பூஜைகளும்,தீபாராதனைகளும் நடந்தது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
படவிளக்கம் : நத்தம் கைலாசநாதர் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்த நந்தீஸ்வரர்.
திண்டுக்கல் செய்தியாளர் மதுமிதி.

கருத்துகள்
கருத்துரையிடுக