நத்தத்தில் வனத்துறை அலுவலகம் முன் திடீர் சாலை மறியல்!!



திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகேயுள்ள மங்களப்பட்டி-புதூர் பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் விறகு வெட்டியதாக அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் மீது நத்தம் வனச்சரகர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்துள்ளார். இதையறிந்த தமிழர் தேசம் கட்சியைச் சேர்ந்த பூமி அம்பலம், பிரபு அம்பலம் உள்ளிட்ட அப்பகுதியைச் சேர்ந்த சிலருடன் வந்து இது பற்றி வனச்சரகரிடம் கேட்டுள்ளனர். 

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து வனத்துறை அலுவலகம் முன் திடீர் சாலை மறியல் செய்தனர் உடன் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரசம் பேசினர்: இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

பட விளக்கம்: நத்தம் வளத்துறை அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் போலீஸார் சமரசப் பேச்சில் ஈடுபட்டனர்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!