ரத்தத்தால் கைரேகை வைத்து மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு!!
உசிலம்பட்டி பாரதிய ஃபார்வேர்ட் பிளாக் நிறுவனத் தலைவர் K.A உசிலை முருகன் ஜி மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கினார். திருப்பரங்குன்றம் தீபத்தூனில் உயர்நீதிமன்ற தீர்ப்பின் உத்தரவின்படி தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இந்த தீபப் பிரச்சினையில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள், தேச பிரிவினைவாத சக்திகள் மறைமுகமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி, இது குறித்து தேசிய புலனாய்வு முகமை NIA விசாரிக்க வேண்டும் எனக் கூறியும் நேற்று பாரதிய பார்வேர்ட் பிளாக் நிறுவன தலைவர். கே ஏ உசிலை முருகன் ஜி அவர்கள் ரத்தத்தால் கைரேகை வைத்து மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு அளித்துள்ளார்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக