நெமிலி அருகே பல்லாவரம் புத்தர் பெண்கள் கபடி குழு தொடக்க விழா! எஸ்.ஜி.சி பெருமாள் பங்கேற்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம், சிறுணமல்லி ஊராட்சி, பல்லாவரம் புத்தர் பெண்கள் கபடி குழு 6ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் அவர்கள் கலந்து கொண்டு கபடி குழுவினருக்கு டீ சர்ட், ஷூ ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பெண்கள் கபடி குழு மென்மேலும் வளர வேண்டும். பல சாதனைகளை படைக்க வேண்டும் என்றார். இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் கபடி குழு வீரர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி


கருத்துகள்
கருத்துரையிடுக