அருள்மிகு ஸ்ரீ விளங்கையன் கருப்பண்ண சுவாமி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம்!!
தேனி மாவட்டம், சின்னமனூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ விளங்கையன் கருப்பசாமி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா மிக விமர்சையாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை உடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா வாஸ்து சாந்தி திருமுறை பாராயணம் கோபூஜை கன்னியா பூஜைகள் நிறைவடைந்து. நேற்று காலை வெவ்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்த குடங்கள் யாகசாலையில் இருந்து புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரத்தின் உச்சியில் எடுத்துச் செல்லப்பட்டு வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டது.
இதில் சின்னமனூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானூர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை அருள்மிகு ஸ்ரீ விளங்கையன் கருப்பண்ண சுவாமி அருள்மிகு ஸ்ரீ சிவகாமி அம்மன் திருக்கோயில் திருக்கோயில் திருப்பணி குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்
கருத்துரையிடுக