நத்தம் அருகே உள்ள சமுத்திராப்பட்டி ஐயப்பன் கோயிலில் நடைபெற்ற மண்டல பூஜை விழா!!
திண்டுக்கல் மாவடட்டம், நத்தம் அருகேயுள்ள சமுத்திராப்பட்டியில் உள்ள ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை விழா நடந்தது. இதையொட்டி யாகசாலை அமைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை
அதிகாலை முதல் சிவாச்சாரியார்களின் வேத பாராயணம், கணபதி ஹோமம் நடந்ததை தொடர்ந்து கும்பங்களுக்கு பூஜைகள் நடந்தது. பின்னர் ஐய்யப்பன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலாங்காரம், தீபாராதனைகளைத் தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடந்தது. இதில் குருசாமியாக கிருஷ்ணன் முன்னின்று பூஜைகள் நடந்தது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஐய்யப்ப பக்தர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து அறுசுவை உணவு அன்னதானம் நடந்தது. இதற்கான ஏற்பாடு சமுத்திராபட்டி கிராம ஐய்யப்பசாமிகள், விழாக் குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு மத நல்லிணக்க விழாவாக நடத்தினர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக