நத்தத்தில் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த நகை பணம் திருட்டு!நத்தம் போலீசார் விசாரணை!!


திண்டுக்கல் மாவட்டம், நத்தம் செட்டியார்குளம் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார். திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி முருகேஸ்வரி நத்தத்தில் உள்ள வீட்டில் குழந்தைகளுடன் குடியிருந்து வரும் நிலையில் வீட்டை பூட்டி விட்டு தனது 2 குழந்தைகளையுடன் கரூர் அருகேயுள்ள ஈசநத்தத்தில் தனது பெற்றோர் வீட்டுக்குச்  கடந்த 3 தினங்களுக்கு முன் சென்று விட்டார். இந்நிலையில் இவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்துள்ளது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் தகவல் நந்தகோபாலுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

செவ்வாய்கிழமை  அவர்கள் வீட்டுக்கு வந்து பார்த்த போது அங்குள்ள பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ரொக்கம் ரூ.23 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி கொலுசுகள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது. இது குறித்து நத்தம் காவல் நிலையத்தில் நந்தகுமார் புகார் செய்ததன் பேரில் நத்தம் போலீஸார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். ஆள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

படவிளக்கம்: நத்தம் செட்டியார்குளத் தெருவில் வீட்டின் பூட்டை  உடைத்து பீரோவிலிருந்த பணம் திருடப்பட்ட நிலையில் பொருட்கள் சிதறிக் கிடப்பதை காணலாம்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!