சாலபாளையம் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு!!
நாமக்கல் மாவட்டம் சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஆர்வத்துடன் காத்திருந்த சாலப்பாளையம் ஜல்லிக்கட்டு தேதி அறிவிப்பு வெளியாகி உள்ளது .கடந்த ஆண்டு பல தடைகளை தாண்டி மிகப் பிரம்மாண்டமாக திரு ராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆண்டு சாலபாளையம் ஜல்லிக்கட்டு எப்போது நடக்கும் என்று ஆர்வத்துடன் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு சாலபாளையம் ஜல்லிக்கட்டு வருகின்ற மார்ச் ஒன்றாம் தேதி நடைபெற உள்ளது .
சாலப்பாளையம் ராஜா அவர்களின் தலைமையில் ஏற்பாடுகள் முழு வீச்சாக நடைபெற்று கொண்டு வருகிறது. சாலபாளையம் ஜல்லிக்கட்டு விழாவிற்கு முகூர்த்த கால் நடப்பட்டது. மிகப் பிரமாண்டமாக நடத்த செயல்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டுள்ளது .
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக