ஆட்சி மொழி சட்ட வார விழா நேற்று முதல் தொடக்கம்!!


தேனி மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தேனி மாவட்டத்தில் தமிழ் ஆட்சி மொழி சட்ட வார விழா நேற்று முதல் வருகிற 25-ம் தேதி வரை ஒரு வார காலம் கொண்டாடப்பட உள்ளது அதன் ஒரு பகுதியாக இன்று சின்னமனூர் கிளை நூலகத்தில் ஆட்சி மொழித் திட்டம் நடக்கிறது இன்று தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் தொழிலாளர் துறையுடன் இணைந்து வணிக நிறுவன உரிமையாளர்கள் வணிக நிறுவன அமைப்புகளுக்கு வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை, அமைத்திட வலியுறுத்தி கலந்தாய்வு கூட்டம் நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக 22 ,23ஆம் தேதிகளில் ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சி மொழி சட்ட அரசாணை மொழி பயிற்சி கலை ,சொல்லாக்கம் ,வரைவுகள் ,குறிப்புகள் எழுதுதல், கணினித்தமிழ், ஒருங்குறி பயன்பாடு முதலிய தலைப்புகளில் அரசு பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடக்கிறது 24ஆம் தேதி தேனி அரசு சட்டக் கல்லூரியில் மாணவ மாணவிகள் பங்கேற்கும் பட்டிமன்றம் நடக்கிறது ,நிறைவு நாளில் விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது இந்த தகவல் தேனி மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங் IAS அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!