பாரத் நிகேதன் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி, கைப்பந்து மற்றும் கால்பந்து போட்டிகள்!!
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே பாரத் நிகேதன் தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து ,கபடி ,கால்பந்து ,போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கல்லூரி சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் தேனி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை மற்றும் பத்திற்க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மூன்று நாட்கள் நடைபெற்ற போட்டியில் கபடியில் K.N பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் இரண்டாம் இடத்தில் நாகமலை புதுக்கோட்டை ஜெயராஜ் பள்ளி அணியும் வெற்றி பெற்றனர். கைப்பந்து போட்டியில் கம்பம் சிபியு பள்ளி அணியும் இரண்டாம் இடத்தை வடுகபட்டி அரசு பள்ளி அணியும் வெற்றி பெற்றனர் .கால்பந்து போட்டியில் முதல் இடத்தை இராயப்பன்பட்டி சிபியூ பள்ளியும் அணியும் இரண்டாம் இடத்தை தேனி வேலம்மாள் பள்ளி அணியும் வெற்றி பெற்றனர் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களை பிடித்த அணியினருக்கு பதக்கங்களும் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு கல்லூரி நிர்வாகம் சார்பில் பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.




கருத்துகள்
கருத்துரையிடுக