பிரபல ரவுடியின் மனைவி தற்கொலை!!
தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி பாலமுருகன் மீது தமிழகம் மற்றும் கேரளாவில் கொலை கொள்ளை என சுமார் 90-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது இந்த நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக கடந்த மாதம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லும் வழியில் தப்பி ஓடிய பாலமுருகன் கடையம் பகுதியில் அமைந்துள்ள பொத்தையில் பதுங்கி இருப்பது தெரிய வந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பெயரில் 100 மேற்பட்ட போலீசார் மலையை சுத்தி வளைத்து ட்ரோன் கேமரா உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் ரவுடி பாலமுருகன் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் உட்பட விஷம் அருந்தி தற்கொலை முயற்சி செய்தனர் இந்த நிலையில் இரண்டு குழந்தைகள் உயிர் பிழைத்து உள்ளனர் மற்றும் பாலமுருகன் மனைவி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார் அவரது உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் பாலமுருகன் உறவினர்கள் பாலமுருகன் மனைவியின் உடலை வாங்க மறுத்து வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் மனைவியின் இறுதி சடங்குக்கு பாலமுருகன் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் காவல்துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனை முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்...பிரபல ரவுடி பாலமுருகன் மனைவியின் உடலை பார்க்க பாலமுருகன் வருவார் எனவும் எதிர்பார்க்கப்படும் நிலையில் வந்தால் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுக்கோட்டை செய்தியாளர் அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக