வடலூரில் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொது நலச்சங்கம் சார்பில் மாநில நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம்!!

தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு  வடலூர் ஸ்வீட் அறக்கட்டளை அலுவலகத்தில் அனைத்து நுகர்வோர் பொதுமக்களின் சுற்றுச்சூழல் பொதுநல சங்கம் சார்பில் மாநில நுகர்வோர் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது 

மாநிலத் துணைத் தலைவர் துரை கணேசன் முன்னிலை வகித்தார்.

சங்கத்தின் வடலூர் நகர தலைவர். சி வி ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில். 

சிறப்பு அழைப்பாளராக அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநிலத் தலைவர் வழுததரெட்டி ஆரோக்கியசாமி மற்றும் ஸ்வீட் அறக்கட்டளையின் நிறுவனர் ஏ சி டி தனக்கேசவமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் பெண்கள் மற்றும் ஏழை மக்கள் பணம் கொடுத்து ஒரு பொருளை வாங்கும் பொழுது ஏமாறக்கூடாது பெண்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

மேலும் கூட்டத்தில்:

வடலூரில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய கடைகளை திறந்து பேருந்து நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

அரசு பணிகள் காலதாமதமாக நடைபெறுவதை தடுக்க தமிழக அரசு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சேவை பெறும் உரிமை கட்டணத்தை அமல்படுத்த வேண்டும் 

பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும் போக்கை மாற்ற மாதந்தோறும் மின்சார கணக்கீடு செய்ய வேண்டும்.

உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு சங்கத்தின் சார்பில் புடவைகள் பரிசாக வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில்  மாநில பொதுச் செயலாளர் பண்ருட்டி காமராஜ் குறிஞ்சிப்பாடி தலைவர் பழனியப்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!