குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி!!
தென்காசி மாவட்டம் குற்றாலம் மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த கன மழையின் காரணமாக கடந்த இரு தினங்களாக சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை முதல் மழை பொழிவு இல்லாமல் நீர் வரத்து சற்று குறைந்ததின் காரணமாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்ட செய்தியாளர் ஜெயக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக