உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மஞ்சம்பாடி-ஆதரவற்றோர் விடுதியில் அன்னதானம் வழங்கிய பெ. வடிவேலு!!

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், கழக இளைஞரணிச் செயலாளர், உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு

ராணிப்பேட்டைமாவட்டம்,இராணிப்பேட்டை மாவட்ட விவசாய தொழிலாளர் அணி சார்பில், மாவட்ட அமைப்பாளர். என்.ராமலிங்கம் அவர்கள் தலைமையில், நெமிலி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட மஞ்சம்பாடி கிராமத்தில் உள்ள “பிரேம் நிகேதன்” ஆதரவற்றோர் விடுதியில் மதிய உணவு அன்னதானம் வழங்கப்பட்டது

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக நெமிலிக் கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய பெருந்தலைவருமான பெ. வடிவேலு அவர்களும், அரக்கோணம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆசிரியர்.தமிழ்மணி அவர்களும், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளரும் சயனாபுரம் ஊராட்சி மன்ற தலைவருமான பவானி வடிவேலு அவர்களும் கலந்து கொண்டு, ஆதரவற்றோர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு மதிய உணவாக பிரியாணி வழங்கினர்.

ஆதரவற்றோர் விடுதியில் தங்கியுள்ள முதியோர்களும், மாணவர்களும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர். உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நீண்ட ஆரோக்கியத்தோடு, நல்ல உடல் நலத்தோடு, மக்கள் சேவையில் சிறந்து விளங்கிடவும் மென்மேலும் வாழ்வில் வளம் பெற்றிடவும் மனதார வாழ்த்தினர்.

இந்நிகழ்ச்சியில், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர். ராகுல், சுப்பிரமணி, கருணா, லட்சுமிபதி, தமிழ்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!