ராணிப்பேட்டையில் நடைபெற்ற நீதிமன்ற நுழைவாயிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணி விலகல் போராட்டம்!!
ராணிப்பேட்டைமாவட்டம்,ராணிப்பேட்டை நீதிமன்ற நுழைவு வாயிலில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பனி விலகல் போராட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பார் அசோசியேஷன் தலைவர். சுரேந்திரன், செயலாளர். சரவணன் , , பாலகிருஷ்ணன், ஜெயக்குமார், ராஜேந்திர பிரசாத் , ஹரி, ஜானகிராமன், லோகநாயகி ,மாயாதேவி கிரிஜா, அமுதா மற்றும் பலர் பங்கேற்று இ -ஃபைலிங் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் திறன் கொண்ட நீதிமன்ற ஊழியர்களை நியமிக்காமல்
இ -ஃபைலிங் முறையை கட்டாயப்படுத்தி இருப்பதை வன்மையாக கண்டிக்கும் வகையிலும் இ ஃபைலிங் கட்டமைப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் வரையும் மற்றும் தமிழ்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட பார் அசோசியேஷனுக்கு ஒரு ஆல் இன் ஆல் பிரிண்டர் மற்றும் கம்ப்யூட்டர் சிஸ்டம் இலவசமாக கொடுக்கும் வரையும் மேனுவல் ஃபைலிங் முறையை அனுமதிக்க வலியுறுத்தியும் 08-12-2025 முதல் 12-12-2025 வரை நீதிமன்ற பனிவிலகல் போராட்டம் தொடரும். அதனால் வரை நீதிமன்ற பணியில் இருந்து விலகி இருக்கும் படி உறுப்பினர்களை முழு ஒத்துழைப்பு வழங்க அனைத்து வழக்கறிஞர்கள் சார்பில் கேட்டுக் கொண்டார்கள் இந்தப் போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட வழக்கங்கள் பங்கேற்றனர்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.



கருத்துகள்
கருத்துரையிடுக