பாமக பிளவின் பின்னணியில் ஆற்காட்டில் சௌமியா அன்புமணி பங்கேற்ற“மகளிர் உரிமை மீட்பு பயணம்”கூட்ட ஏற்பாடு சீர்கேடு – நிர்வாகத் தோல்வி வெளிச்சம்!!


ராணிப்பேட்டை மாவட்டம்,பாமக பிளவின் பின்னணியில் ஆற்காட்டில் சௌமியா அன்புமணி பங்கேற்ற“மகளிர் உரிமை மீட்பு   பயணம்”கூட்ட ஏற்பாடு சீர்கேடு – நிர்வாகத் தோல்வி வெளிச்சம்!பெண்களை மையமாகக் கொண்டு நடத்தப்பட்ட கூட்டமே, பெண்களுக்கே கடும் சிரமமாக மாறிய அவலம்

 திண்டிவனம் மருத்துவர். ராமதாஸ் அவர்களால் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி (பாமக), ஒரு காலத்தில் தெளிவான அரசியல் திசையுடன் செயல்பட்டு வந்த நிலையில், அன்புமணி ராமதாசை தலைவராக அறிவித்ததிலிருந்து கட்சிக்குள் குழப்பமும், அச்சமும் அதிகரித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மருத்துவர் நிறுவனத் தலைவர் ராமதாஸ் தனது மகன் அன்புமணி ராமதாஸ் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து தனக்கு விரோதமாக செயல்பட்டதாக பல்வேறு ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் செய்திகள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, பாமக நிறுவனத் தலைவர். ராமதாஸ், அன்புமணியை கட்சியிலிருந்து நீக்கியதாக அறிவித்தார்.

ஆனால், அன்புமணி ராமதாஸ், தான் தான் பாமக  தலைவர் எனக் கூறி தொடர்ந்து அரசியல் பயணங்களை மேற்கொண்டு வருகிறார். இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கும் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தற்போது தமிழகம் முழுவதும் “அன்புமணி பாமக” மற்றும் “ராமதாஸ் பாமக” என இரண்டு பிரிவுகளாக பாமக பிளவுபட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த அரசியல் பின்னணியில், அன்புமணி பிரிவு சார்பில் அவரது மனைவி.சௌமியாஅன்புமணி,“சிங்கப்பெண்ணே எழுந்து வா” என்ற தலைப்பில்! “தமிழக மகளிர் உரிமை மீட்பு பயணம்” என்ற பரப்புரை பயணத்தை தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக மேற்கொண்டு வருகிறார்.

ஆற்காட்டில் பரப்புரை – கலந்துரையாடல் கூட்டம்:

அந்த வகையில், ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த திமிரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மகளிர் அமைப்புகள் மற்றும் (அன்புமணி பிரிவு) பாமக கட்சி தொண்டர்கள் பங்கேற்ற பரப்புரை – கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் பசுமைத்தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி கலந்து கொண்டு உரையாற்றினார்.

பாலாறு – விவசாயம் – சுற்றுச்சூழல் குறித்து கடும் விமர்சனம்:

உரையில் அவர் பேசுகையில்,வட மாவட்டங்களின் உயிர் நதியான பாலாறு, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குறுகிய தூரம் மட்டுமே பாய்ந்தாலும், அங்கு நீரை சேமிக்க பல தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன.ஆனால், தமிழகத்தில் சுமார் 220 கிலோமீட்டர் பாயும் பாலாற்றை பாதுகாக்கவும், விவசாயத்தை காக்கவும் தேவையான அணைகள் கட்டப்படவில்லை. பல போராட்டங்களுக்குப் பிறகே சில அணைகள் மட்டும் கட்டப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டம் விவசாயத்திற்கு முக்கியமான மாவட்டமாக இருந்தும், போதுமான நீர் மேலாண்மை இல்லாததால் தண்ணீர் வீணாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், 1975-ம் ஆண்டு தொடங்கப்பட்ட குரோமியம் தொழிற்சாலையால் இப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சாலை மூடப்பட்டாலும், கடந்த 35 ஆண்டுகளாக குரோமியம் கழிவுகள் அகற்றப்படாதது அரசின் மெத்தனத்தை வெளிப்படுத்துகிறது என்றார்.இதனால் நீர், நிலம், காற்று மாசடைந்து, மக்கள் பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதுடன், சுமார் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் மலட்டுத்தன்மை அடைந்துள்ளதாகவும்குறிப்பிட்டார்.பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்,ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதுவினால் வருவாய் பெறும் அரசு, 500 கோடி ரூபாய் ஒதுக்கினாலே இந்த பிரச்சனையை முழுமையாக தீர்க்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பெண்கள் விழிப்புணர்வு – தேர்தல் அரசியல்:

பெண்கள் தங்கள் சக்தியை உணர வேண்டும் என்றும்,ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை வாங்கும் அரசியலுக்கு எதிராக, பெண்கள் விழிப்புணர்வுடன் இருந்து வரும் தேர்தலில் பாமகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கூட்ட ஏற்பாடுகளில் கடும் அலட்சியம் – பெண்கள், குழந்தைகள்அவதிஇத்தகைய முக்கிய அரசியல் பரப்புரை கூட்டம் நடைபெற்ற போதிலும்,கூட்ட ஏற்பாடுகள் மிக மோசமான நிலையில் இருந்ததாக பங்கேற்பாளர்கள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

போதிய இட வசதி இல்லாமை குடிநீர் வசதி சரிவர இல்லாதது உணவு ஏற்பாட்டில் கடும் குழப்பம் சோறு வழங்குவதில் சண்டை, தள்ளுமுள்ளு!

பெண்கள் குழந்தைகளுடன் நெரிசலில் சிக்கி பெரும் அவதி

போன்ற காரணங்களால், மகளிர் மையமாக நடத்தப்பட்ட கூட்டமே பெண்களுக்கு சிரமமாக மாறியது

திருட்டு புகார் – பாதுகாப்பு கேள்விக்குறி?

இந்த கூட்டத்தில் பங்கேற்க கலவை பகுதியைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள்,

தாங்கள் உட்கார்ந்திருந்த இடத்தில் வைத்திருந்த பை மற்றும் பர்ஸ் (பணத்துடன்) மர்மமான முறையில் காணாமல் போனதாக புகார் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திலேயே யாரோ திருடிச் சென்றிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்த நிலையில்,

கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு அலட்சியமாக இருந்தன என்பதையும் இந்த சம்பவம் வெளிப்படுத்துவதாக பங்கேற்பாளர்கள் கூறினர்.

வாகன ஏற்பாடுகளில் மோசடி – ஏமாற்றப்பட்ட மக்கள்!

மேலும், சில பகுதிகளில் இருந்து மக்களை கூட்டத்திற்கு அழைத்து வரும்போது,

“காலண்டர், பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்” என்று கூறி வாகனங்களில் ஏற்றி கொண்டு வந்ததாகவும்,

ஆனால் கூட்ட இடத்தில் எந்த பரிசுப் பொருட்களும் வழங்கப்படவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டினர்.

“எங்களை ஏமாற்றி கூட்டத்திற்கு அழைத்து வந்துள்ளனர் என்றனர் இந்த சம்பவம் பெண்களிடையே நம்பிக்கையிழப்பை ஏற்படுத்துகிறதுஎன பொதுமக்கள் வெளிப்படையாக அதிருப்தி தெரிவித்தனர்.மாவட்ட செயலாளர் மீது கடும் அதிருப்தி இந்த அனைத்து குழப்பங்களுக்கும், தற்போது மாவட்ட செயலாளராக செயல்பட்டு வரும் இளவழகன் மீது கட்சி வட்டாரங்களில் தீவிர விமர்சனங்கள் எழுந்துள்ளன.

கூட்டங்களை ஒழுங்காக நடத்த இயலாத நிர்வாகத் தோல்வி!தொண்டர்கள், பொதுமக்களிடம் உரிய மரியாதை இல்லாமை அனைவரையும் ஒருங்கிணைக்கும் தலைமைத் திறன் குறைவு ரவுடி பாணி அணுகுமுறை போன்ற குற்றச்சாட்டுகள் வலுவாக பேசப்பட்டு வருகின்றன.

“இவர் தொடர்ந்து மாவட்ட செயலாளராக செயல்பட்டால்,ராணிப்பேட்டை மாவட்டத்தில் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக கட்சி பெரும் பின்னடைவை சந்திக்கக்கூடும்”என்ற அச்சமும் கட்சி வட்டாரங்களில் வெளிப்படையாக பேசப்படுகிறது.

முக்கிய தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் கூட இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது,

மாவட்ட நிர்வாகத்தின் முழுமையான தோல்வியாகவே கட்சி தொண்டர்கள் கருதுகின்றனர்.

பாமக தலைமை நிர்வாகம் இந்த மாவட்ட செயலாளர் மீது தனி கவனம் வைத்து நிர்வாக சீர்கேட்டை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைமை நிர்வாகம் என்னதான் முடிவு செய்யப் போகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு.பிரகாசம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!