கவிஞர் இரா. ரவியின் படைப்பில் மின்னல் னஹக்கூ புத்தகம்!!
நூலின் பெயர் : மின்னல் ஹைக்கூ
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : பேராசிரியர் இ.கி. இராமசாமி .மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் .யாதவர் கல்லூரி திருப்பலை.மதுரை .
வெளியீடு வானதி பதிப்பகம் 23.தீன. தயாளு தெரு,தியாகராயர் நகர்.சென்னை.17.பக்கங்கள் 84 விலை ரூபாய் 80. தொலைபேசி எண்கள் 044 24342810./ 24310769 மின்னஞ்சல் vanathipathippakam@gmail.com
ஹைக்கூ திலகம் தமிழ்ச்செம்மல் இரவியின் மின்னல் ஹைக்கூ கவிதைகளில் படித்ததில் பிடித்தவை :
(1) புத்தகத்தின் மதிப்பு, வானதி ராமநாதனின் அணிந்துரை, செயபிரியங்காவின் புரிதலில் அமைந்த படங்கள், கவிஞரின் வாழ்வியல், சாதனைகள், செய்ந்நன்றி பாராட்டும் உள்ளத்தை வெளிப்படுத்தும் வகையில் மாமனிதர் இறையன்பு இ.ஆ.ப.-வின் தந்தையார் படம், தரமான தாள், நூற்கட்டு யாவும் நெஞ்சில் நிற்கின்றன.
(2) படத்தினால் கவிதை உயிர் பெறுகிறதா? கவிதையால் படம் உயிர் பெறுகிறதா? என்று பாராட்டியுள்ளார் இராமநாதன். கவிதையால் படம் உயிர் பெறுகிறது.
(3) குளிர்பானம் வேகமாக விற்பனை ஆகின்றது. அதனைப் பார்த்து வருந்துகிறதாம் இளநீர். வாழ்ந்து மடிந்தவருக்காக வாழும் தாஜ்மகால். சிற்பி இல்லை சிற்பம் உண்டு எது நிலை? யுகங்கள் கடந்தும் இளமை குன்றவில்லை
தமிழ். (எதார்த்தம் அப்படி இல்லை) மாதா பிதா குரு ஒரே வடிவில் மனைவி. இப்படிச் சொற்சிப்பங்களோடு கருத்தியல் வளம் கொழிக்கின்றது. சமூக அவலங்களை ரவியின் படைப்புகளில் காண முடிகின்றது. அவை என்னமோ செய்கின்றன.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்
கருத்துரையிடுக