வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!வீரவேல் முருகனுக்கு அரோகரா! என்று முருகனை தரிசிக்க கிளம்பிய பாதயாத்திரை குழு!!
தேனி மாவட்டம் சுருளி மலை பகுதியில் பழனி மலை பாதயாத்திரை குழு முருகனை தரிசிக்க கிளம்பிவிட்டனர் பாதயாத்திரை ஆக நடந்தே சென்று அவர்களே ஆங்காங்கே சமைத்து சாப்பிட்டு சிறிது ஓய்வெடுத்துக் கொண்டு மீண்டும் நடைப்பயணத்தை தொடர்ந்து பழனி மலை சென்றடைந்து கிரிவலம் வந்து பழனி மலை முருகனை தரிசித்து அருள் பெறுவார்கள் ."வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா"என்று பாதயாத்திரையின் போது முருகனின் சிந்தையோடு பக்திப் பரவசத்தில் பாடல் பாடிக்கொண்டு ஆடிக்கொண்டும் செல்வார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி


கருத்துகள்
கருத்துரையிடுக