தி.பாறைபட்டியில்மண்பாண்டம் செய்ய பொதுமக்களுக்கு பயிற்சி!!
திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி அருகேயுள்ள கோபால்பட்டி அடுத்துள்ள தி.பாறைப்பட்டியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக மண்பாண்ட தயாரிப்பு நடை பெற்று வருகிறது. இங்கு பாரம்பரிய முறைப்படி களிமண்ணான மண்சட்டிகள், பொங்கல் பானைகள், தீச்சட்டிகள் தயார் செய்யப்பட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த தொழிலில் 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தற்போதைய நவீன காலத்தில் எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியதால் மக்கள் மத்தியில் மண்பாண்டத்தின் பயன்பாடுகள் வெகுவாக குறைந்து வருகிறது. மக்களின் ஆர்வமின்மையால் மண்பாண்ட தொழிலும் முடங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. விரைவில் அழிந்து வரும் நிலையில் உள்ள மண்பாண்ட தொழிலை மீட்டெடுக்கும் விதமாக மத்திய அரசின் கதர் கிராமத் தொழில் வாரியம் மூலமாக செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு மண் பாண்டங்களை செய்யும் பயிற்சி பெற்றனர்.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக