தமிழர் தேசம் கட்சி சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம்!!


நத்தம் அரசு மருத்துவமனையில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையம் அருகே தமிழர் தேசம் கட்சி சார்பில் மாநில செயலாளர் பூமிஅம்பலம்  தலைமையில் மாவட்டச் செயலாளர் பிரபு அம்பலம்,மாநில அமைப்பு செயலாளர் செம்மகுடேஸ்வரன் ஆகியோர் முன்னிலையில்  நத்தம் அரசு 

மருத்துவமனைக்கு மருத்துவர்கள் செவிலியர்களை அதிகரிக்க வேண்டும்,பிணவறை கிடங்கில் குளிர்சாதன பெட்டி வசதி,மகப்பேறு காலங்களில் தாய்,சேய் நலம் பற்றிய அறியும் வகையில் நவீன ஸ்கேன் வசதி,கூடுதல் 108 ஆம்புலன்ஸ் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதில் தமிழர் தேச கட்சியை சேகர், வெள்ளிமலை,அண்ணாமலை, தங்கம், சரத், கார்த்திக், பொன்னுச்சாமி, பிரபு, மச்சக்காளை, மாவட்ட மகளிர் அணி ஞானசுந்தரி உள்ளிட்ட நிர்வாகிகள்,பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள்  ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் நத்தம் மதுரை வீரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!