பட்டியலின இளைஞர் கொலை! தேவேந்திர பேனாக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!


திருநெல்வேலி மாவட்டம் ,பாப்பா குடி காவல் சரகம்,கலிதீர்த்தான்பட்டியில் 29 வயது மதிக்கத்தக்க குமரேசன்  என்ற இளைஞரை நள்ளிரவில் கொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளனர். கொலை செய்யப்பட்ட குமரேசன் பட்டியலின் வகுப்பைச் சேர்ந்த தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்.இவர் விவசாயம் செய்து வருவதால் விவசாய வேலையை  முடித்து விட்டு தனது பயன்பாட்டில் உள்ள பம்ப் செட்டில் 28-11-25ல் இரவில் தூங்கியுள்ளார்.


அன்று நள்ளிரவில் நோட்டமிட்ட கொலையாளிகள் குமரேசனை பயங்கர ஆயுதத்தால் மண்டையில் தாக்கியதில் குமரேசன் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தமர்ம கொலையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி திருநெல்வேலி ஹைகிரவுண்ட்  மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வு செய்ய அனுப்பியுள்ளனர்.

கொலை செய்த கொலையாளிகளை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.இந்த மர்மக்கொலை சம்பந்தமாக கலிதீர்த்தான்பட்டியில் தேவேந்திர பேனாக்கள் இயக்க தலைவர்,பச்சைத் தேவேந்திரர், வழக்கறிஞர் பாலசுந்தரம் தலைமையில் கொலையுண்ட குடும்பத்தார்கள், உறவினர்கள்,நாட்டாமைகள், ஊர் பொதுமக்களும் அனைவரும் கூட்டமாக சேர்ந்து அரசுக்கும்,காவல்துறைக்கும்  தெரிய  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். 


கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தலைவர் பாலசுந்தரம் உயிரிழந்த  குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினார்.மேலும் நம்முடைய அவல நிலையை காவல்துறையிடமும், அரசிடமும் எடுத்துக்கூறுவோம் என கூட்டத்தில் பேசினார். பின்பு திருநெல்வேலி மாவட்ட ஏடிஎஸ்பி,அம்பாசமுத்திரம் டிஎஸ்பி,அவர்களிடம் மர்ம கொலையின் நிலையை கூறி, மர்மமாக கொலை செய்த கொலையாளிகளை துரிதமாக நடவடிக்கை எடுத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து உரியதன்டனை பெற்றுத்தர வேண்டும் என்று வலியுறுத்தினார்.


காவல் துறைஅதிகாரிகளும் பாலசுந்தரம் அவர்களின் கோரிக்கையை ஏற்று நான்கு தனிப்படைகள் அமைத்து  குற்றவாளியை பிடிக்க விசாரனை செய்து வருகிறார்கள்,விரைவில் மர்ம கொலையாளிகள் காவல் துறையினரிடம் சிக்கி விடுவார்கள் என்று உறுதியளித்தனர்.பிறகு கூட்டம் கலைந்து சென்றது.இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் தேவேந்திர பேனாக்கள் இயக்க கடையம் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சங்கரநாராயணன், இளைஞரணி செயலாளர்கள் பாலகிருஷ்ணன்,சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!