ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் பாத்திகளில் விதைகளிட்டு மழலைகள் கொண்டாடிய பசுமை கிறிஸ்துமஸ் விழா!!.
புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளிக்கு வந்த யுகேஜி மழலை மாணவர்கள் கிறிஸ்துமஸ் தாத்தா சாந்தாகிளாஸ் வேடமிட்டு சிவப்பு உடைகளில் வந்திருந்தனர். கடந்;த ஒரு வார காலமாக பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கிறிஸ்துமஸ் மரம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. மழலை மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று தனித்தனியே அமைக்கப்பட்டிருந்த பாத்திகளில் விதைகளை இட்டு முளைப்பதற்கு தண்ணீர் தெளித்தனர். “வழக்கமான முறைகளில் அல்லாமல் இந்த முறை “பசுமை கிறிஸ்துமஸ்”; விழாவாக கொண்டாடத் தீர்மானித்தோம். மழலைக் குழந்தைகளை பாத்திகட்டி விதைகள் இடச் செய்து முளைக்க வைத்ததன் நோக்கம் மழலைகளின் மனதில் மரம் வளர்பதன் அவசியத்தை உணர்த்த வேண்டும் என்பதுதான் என்று பள்ளியின் இயக்குனர் ரா. சுதர்சன் குறிப்பிட்டார். இன்று பிறந்த நாள் கொண்டாடிய மாணவி மாகலெட்சுமி என்ற குழந்தை பள்ளிக்கு மரக்கன்றுகளை பரிசளித்தார் இந்த நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் கௌரி, மழலையர் ஆசிரியர்கள் சந்திரகலா, சினேகா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக