நத்தத்தில் கையெழுத்து இயக்கம் !!
நத்தத்தில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது. இதற்கு தாலுகா செயலர் குழந்தைவேல் தலைமை தாங்கினார்.மாவட்ட குழு உறுப்பினர். சின்னக்கருப்பன் முன்னிலை வகித்தார். இதில் நத்தம் பகுதி மக்கள் கலந்து கொண்டு அரசு மருத்துவமனை தரம் உயர்த்த கோரியும், காலிப்பணியிடங்களை நிரப்ப கோரியும், இரவு நேரத்தில் கூடுதல் மருத்துவர் நியமிக்க வேண்டியும் கையெழுத்திட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
படவிளக்கம்: நத்தம் அரசு மருத்துவமனையை முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்தபட்டது.
திண்டுக்கல் செய்தியாளர் மதுமிதி.

கருத்துகள்
கருத்துரையிடுக