ராணிப்பேட்டையில் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம்!!
ராணிப்பேட்டை முத்துக்கடை அருகே அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு மண்டல தலைவர் முஸ்தாக் பாஷா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் நிஜாம் மொய்தீன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு எதிர்கால நிகழ்வுகள் மற்றும் அமைப்பு வலுப்படுத்தல் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
செயற்குழு உறுப்பினர் பயாஸ் அஹமது, தொழிற்சங்க மாநிலத் தலைவர் (வேலூர்) ஆசாத், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட தலைவர் (ஆற்காடு) கவுஸ், மாவட்ட பொதுச் செயலாளர் சையது கரீமன் உள்ளிட்ட பல்வேறு மாவட்ட & தொகுதி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, வரும் ஜனவரி 3 ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் மண்டல பூத் கமிட்டி மாநாட்டில், 28 தொகுதிகளிலிருந்து சுமார் 2800 பூத் கமிட்டி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
ஆற்காடு செய்தியாளர் ஆனந்த்

கருத்துகள்
கருத்துரையிடுக