அரிமளத்தில் அமைச்சர். ரகுபதி பேட்டி!!

புதுக்கோட்டை மாவட்டம்,விஜய் பிஜேபி யின் 'சி'.டீம். அவர் எங்களை  பார்த்து தீயசக்தி என்கிறார்.எங்களிடம் மக்கள் சக்தி தான்  உள்ளது.  சினிமாவில் வேணா அவர் டயலாக் பேசலாம். நடைமுறையில் அவரது பேச்சு எடுபடாது. அவர் எம்.ஜி.ஆர் போல ஆட்சிக்கு வரப்போவதாக பகல்கனவு காண்கிறார்.1972 ல் கட்சியை ஆரம்பித்த எம்ஜிஆர் திண்டுக்கல் இடைத்தேர்தலில் போட்டியிட்டு தனது பலத்தை நிரூபித்தார்.ஆனால் விஜய் கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட( விக்கிரவாண்டி, ஈரோடு ) இரு தேர்தல்களிலும் தோல்வியடைந்தார். அவருக்கு சேரும் கூட்டம் ஓட்டுக்களாக ஒருபோதும் மாறாது. தமிழகம் அமைதிப்பூங் காவாக திகழ்கிறது. தமிழகத்தில் மகளிருக்கு பாதுகாப்பில்லை  என கூறும் விஜய் தன் கூட்டத்திற்கு  வந்த மகளிர்  எவ் வளவு அமைதியாக  வந்து சென்றனர் என்பதை அறிய வேண்டும்.எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான்  மகளிருக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், மகளிர் உதவித்தொகை,காலை உணவுத்திட்டம் போன்றவை தாய்மார்களின் கண்ணீரைத் துடைக்க  செயல் படுத்தப்படுகின்றன.  இதை தமிழக மக்கள் நன்கு உணர்வார்கள் . திருப்பரங்

 குன்றம் விவகாரத்தை  சிலர் அரசியல் ஆதாயம் தேடி திசை திருப்ப பார்க்கின்றனர்.  இதற்கெல்லாம் திராவிட மாடல் அரசு   ஒருபோதும் அஞ்சாது. என்றார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!