ராணிப்பேட்டை சிஐடியு சார்பில் மறியல் போராட்டம்!!


ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையம் அருகில் சிஐடியு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது . இந்த போராட்டம் 44 தொழிலாளர் நல சட்டங்களை முதலாளிகளுக்கு ஆதரவாக. நான்கு சட்டத்தொகுப்பு திருத்தத்தை திரும்பப் பெறு !  150 ஆண்டு காலம் போராடி பெற்ற தொழிற்சங்க உரிமையை. பறிக்கும் மோடி அரசை கண்டித்து நாடு தழுவிய மறியல் போராட்டம் நடைபெற்றது . 

இந்தப் போராட்டத்திற்கு மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார் தலைமை வகித்தார் . மாவட்ட செயலாளர் தவராஜ் , மாவட்ட பொருளாளர், காசிநாதன் தா வெங்கடேசன் , துரைராஜ் ஞான முருகன் , ராஜேந்திரன் சீனிவாசன். ஆகியோர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர் .

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் . மேலும் இதில் சி ஐ டி யு தொழிற்சங்கத்தை சேர்ந்த கிட்டு ஹேமாவதி ரமேஷ் குழந்தைவேலு ஜெயக்குமார் ஜானகிராமன் மாலதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட சி ஐ டி யு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!