தேனியில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர். ரஞ்சித் சிங்!!
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 331 மணுக்கள் குவிந்த தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டு அரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் தலைமை வகித்தார் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார் இக்கூட்டத்தில் பல்வேறுதுறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து கோரிக்கை மனுக்களை அளித்தனர் இதன்படி முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என மொத்தம் 331 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் ரஞ்சித் சிங் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார் இக்கூட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ஐந்து பேருக்கு ரூபாய் 43905 மதிப்பிலான விலை இல்லா தேய்ப்ப பெட்டிகளையும் ஆறு பேருக்கு ரூபாய் 31218 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரங்களையும் கலெக்டர் வழங்கினார் இக்கூட்டத்தில் ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) கதிர்வேல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கவிதா உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி

கருத்துகள்
கருத்துரையிடுக