முன்னாள் எம்எல்.ஏ. நினைவு தினம் காங்கிர் கட்சி சார்பில் அனுசரிப்பு!!
திருமயத்தில் முன்னாள் எம்எல்ஏ வெ.சின்னையாவின் 23 வது ஆண்டு நினைவு தினம் காங்.சார்பில் அனுசரிக்கப்பட்டது. திருமயம் சட்ட மன்றத்தொகுதி எம்.எல்.ஏ ஆக 1996_ 2001 வரை காலத்தில் பதவி வகித்தவர் வெ.சின்னையா. இவர் தொடக்கத்தில் காங் .கட்சியில் இருந்தார்.கருப்பையா மூப்பனார் காங்கிரசை விட்டு விலகி தமிழ்மாநில காங்கிரசை தொடங்கியபோது அதில் இணைந்து பணிபுரிந்தார். 2002: ல் அவர் உடல்நலமின்றி காலமானார்.அவரது நினைவு நாள் ஆண்டுதோறும் காங்.சார்பில் அனுசரிக்கப்படுகிறது. இந்த வகையில் நேற்று முன்னாள் எம்எல்.ஏ யின் உருவப்படத்தை கடைவீதியில் அலங் கரித்து வைத்திருந்தனர்.அதற்கு முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் கணேஷ்பிரபு, வட்டார காங்.தலைவர்கள் மணிகண்டன்,முருகேசன்,காங்.மூத்த தலைவர்கள் மலைக்கொழுந்து அக்பர் அலி,மீனாட்சி சுந்தரம்,ஆனந்தன் ,வக்கீல் அசோகன் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இளைஞர் காங்.தலைவர் வெங்கிடாசலம் நன்றி கூறினார். பட விளக்கம்.திருமயம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ சின்னையாவின் நினைவு நாள் காங்.சார்பில் அனுசரிக்கபட்டது.
புதுக்கோட்டை செய்தியாளர் PR.அசோக்

கருத்துகள்
கருத்துரையிடுக